தமிழகம்

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடத் தயங்கும் சுகாதார ஊழியர்கள்

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போட சுகாதாரப் பணியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். முதற்கட் டமாக 24 ஆயிரம் பேருக்கு போடத் திட்டமிட்டு, இதுவரை 3,601 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். பலரும் தடுப்பூசி போட வர மறுப்பதால் சுகாதாரத் துறையினர் தவிக்கின்றனர்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கி வைத்தார். புனே சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத் பாரத் பயோடெக் தயாரித்த ‘கோவேக்சின்’ ஆகிய கரோனா தடுப்பூசிகள் அரசு அனுமதியுடன் போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கரோனாதடுப்புப் பணியில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

புதுச்சேரிக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி 17,500 பாட்டில்கள் வந்துள்ளன. புதுச்சேரியில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக புதுச்சேரியில் 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. முதல் கட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 8 மையங்களில் தலா 100 பேர் வீதம் 800 பேருக்கு கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மிகவும் குறைவானோரே இந்த தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

இதுபற்றி சுகாதாரத் துறையி னரிடம் விசாரித்த போது, "இதுவரை சுகாதாரப் பணியாளர்களுக்கு 12 நாட்கள் தடுப்பூசி போட்டுள்ளோம். மொத்தம் 3,601 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 800 பேர் வரை தடுப்பூசி போட திட்டமிட்டிருந்தோம். கடைநிலை சுகாதார ஊழியர்கள் பலரும் வரவில்லை. போன் செய்து தொடக்கத்தில் அழைத் தோம்.

பலரும் வேண்டாம் என்று கூறி, வர மறுக்கின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.

3,601 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். கடைநிலை சுகாதார ஊழியர்கள் பலரும் வேண்டாம் என்று கூறி, வர மறுக்கின்றனர்.

SCROLL FOR NEXT