தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தண்ணீர் மூலம் பரவக் கூடிய நோய்களைத் தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் அளவு அதிகப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 11-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும் வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், வேலூர், கட லூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், சேலம், ஈரோடு, தருமபுரி மற்றும் தென்மாவட்டங்களில் பரவலான தொடர் மழையும் பெய்துள்ளது.
தொடர் மழையால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதுடன், குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. கடந்த இரு நாட்களாக மழை குறைந்தபோதும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதி களில் சூழ்ந்த வெள்ள நீர் படிப் படியாக வெளியேறி வருகிறது.
இந்நிலையில், வெள்ளம் மற்றும் சீதோஷணநிலை காரண மாக பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும், நீர்நிலைகள் மூலம் நோய் கிருமி கள் பரவி, அவை மக்களை பாதிக் கும் என்பதால் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி உத்தர விட்டுள்ளார்.
தற்போது, மழைக்காலம் என் பதால் குடிநீரில் இருக்கும் நோய்க் கிருமிகள் மூலம் பொதுமக்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில், வழக்கத்தைவிட கூடுத லாக குளோரின் கலந்து விநியோகம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கமாக, குடிநீரில் 0.5 பிபிஎம் (ppm) அளவுக்கு குளோ ரின் கலக்கப்படும். தற்போது 1 பிபிஎம் குளோரின் கலக்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், டேங்கர் லாரிகள் போன்றவற்றில் 2 பிபிஎம் குளோரின் கலக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பொதுமக்களை சென்ற டையும்போது 1 பிபிஎம் அளவு இருப்பதை உறுதி செய்ய, ‘குளோரோ ஸ்கோப்’ கருவி மூலம் சுகாதாரத்துறை அதிகாரி கள் சோதனை நடத்தவும் உத்தர விடப்பட்டுள்ளது.
குளோரின் அதிகரிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஜனவரி மாதம் வரை தொடரவும் தமிழக சுகா தாரத்துறை உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.