தமிழகம்

ஏ.எஸ்.பொன்னம்மாள் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.பொன்னம்மாள் உடல் அவரது சொந்த ஊரான அழகம்பட்டியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே அழகம் பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன் னம்மாள். ஏழு முறை சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம், தனது 88-வயதில் மதுரையில் காலமானார். சொந்த ஊரான அழகம்பட்டிக்கு கொண்டுவரப்பட்ட இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பில் மாநிலத் துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலர் இ.பெ.செந்தில்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொன்னம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஐ.பெரியசாமி கூறும்போது, தொகுதி மக்களுக்காகவே பாடுபட்ட அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது, தொகுதி மக்களுக்கும் பேரிழப் பாகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியான நிலக்கோட்டை தொகுதியை முன்னேற்றியவர் என்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறும்போது, ஏ.எஸ்.பொன்னம்மாள் அரசியல் வாழ்வில் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக் காரர். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோரிட மும் அன்பாகவும், பணிவாகவும் பழகக்கூடியவர். ஒட்டுமாத்த சமுதாய மக்கள் மேம்பாட்டுக்காக வும் பாடுபட்டவர் என்றார்.

மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி, முன்னாள் எம்எல்ஏ யசோதா, காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, முன்னாள் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஆகியோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் திண்டுக்கல் எம்.பி. எம்.உதயகுமார், பேரூராட்சித் தலைவர்கள் சேகர், தண்டபாணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திண்டுக்கல் எம்எல்ஏ கே.பாலபாரதி, தமாகா சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாரமலை, முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. மனோகரன், நிலக்கோட்டை தாசில்தார் காளிமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாலை 4 மணிக்கு மேல் உடல் அடக்கம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT