தமிழகம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் முடி தானம் வழங்கிய பெண் மருத்துவர்கள்

செய்திப்பிரிவு

ஒவ்வொர் ஆண்டும் பிப்ரவரி மாதம் முழுவதும் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் முடி தான நிகழ்ச்சி, இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) கோவை கிளை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து ஐஎம்ஏ கோவை கிளைத் தலைவர் ராஜேஷ்பாபு கூறும்போது, ‘‘புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவாக ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சினையால் பாதிக்கப்படும் ஏழை பெண்களுக்கு உதவிடும் வகையில் ‘விக்' வழங்கப்படுகிறது. இதற்காகவே கூந்தல் தானம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், பெண் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என 38 பேர் முடி தானம் வழங்கியுள்ளனர். குறைந்தபட்சம் 25 செ.மீ. அளவுள்ள கூந்தல் தானமாகப் பெறப்பட்டது. அதை சென்னையில் உள்ள அறக்கட்டளைக்கு அளிக்க உள்ளோம். அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் தயார் செய்து, தானமாக வழங்குவார்கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT