முக்கொம்பு அணை பகுதியில் நீரில் இறந்து கிடந்த முதலையை இழுத்து வரும் ஒரு இளைஞர். 
தமிழகம்

முக்கொம்பு காவிரியாற்றில் இருந்து இறந்த முதலையின் உடலை இழுத்து வரும் இளைஞர்கள்: வீடியோ பதிவுகள் குறித்து வனத்துறை விசாரணை

செய்திப்பிரிவு

திருச்சி அருகே முக்கொம்பு காவிரி ஆற்றில் இறந்துகிடந்த முதலையின் உடலை இளைஞர் கள் இழுத்து வரும் வீடியோ தொடர்பாக வனத் துறை அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின் றனர்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் நீர் வெளியேறும் இடத்தில் கல் இடுக்கில் சிக்கி, இறந்து கிடந்த ஒரு முதலையின் வாலைப் பிடித்து இளைஞர்கள் சிலர் இழுத்துச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு வனத்துறையினருக்கு மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் நேற்று முக்கொம்பு நீர்பிடிப்பு பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள், இச்சம்பவம் எப்போது நடைபெற் றது? முதலை எவ்வாறு இறந்தது? அதை பிடித்து இழுத்துச் செல்லும் இளைஞர்கள் யார்? இறந்துபோன முதலையை அவர்கள் என்ன செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீயபுரம் போலீஸாரும் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT