தமிழகம்

சென்னையில் மழை வெள்ள பாதிப்பை கணக்கெடுக்க அதிகாரிகள் நியமனம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் பருவமழை சேதங்களை கண்டறிந்து நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை மாவட்ட நிர்வாகம், பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுத்து, நிவாரணத் தொகைகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது. சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் சேதங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க, 10 தாலுகாக்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்பணிகளை துரிதப்படுத்தவும், சேதங்களை கணக்கிடவும் அனைத்து தாலுகாக்களுக்கும் துணை ஆட்சியர் நிலையில் மண் டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேளச்சேரி தாலுகாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர், தண் டையார்ப்பேட்டை- மாவட்ட பிற் படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர், புரசைவாக்கம்- மாவட்ட ஆய்வுக் குழும அலுவலர், பெரம்பூர்- உதவிஇயக்குநர் (நில அளவை), எழும்பூர்- மாவட்ட எஸ்சி,எஸ்டி நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைந்தரை- மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர்(நிலம்), மாம்பலம்- மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர், கிண்டி- மாவட்ட சமூக நல அலுவலர்,. மயிலாப்பூர்- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), அயனாவரம்- தனித்துணை ஆட்சி யர் (சமூக பாதுகாப்புதிட்டம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் சேதங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை யின் கட்டணமி்ல்லா தொலைபேசி எண்ணான 1077க்கு தகவல் தெரி விக்கலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT