தமிழகம்

மக்கள் நல கூட்டியக்கத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு: தொல்.திருமாவளவன் தகவல்

செய்திப்பிரிவு

மக்கள் நல கூட்டியக்கம் தமிழகத் தில் நல்ல வரவேற்பை பெற்றுள் ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் கூறியுள்ளார்.

உலக ஹலால் தின விழா புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சங்பரிவார் அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. அரசியல் சட்டம் அங்கீ கரித்துள்ள பேச்சுரிமை, கருத் துரிமை, எழுத்துரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினத்தவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற் பட்டுள்ளது. இவற்றைக் கண்டிக்க வேண்டிய பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது வேதனை தருகிறது. மோடி நாட்டின் அனைத்து மக்க ளுக்கும் தலைவர் ஆவார். எனவே சங்பரிவார் அமைப்புகளை கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுக்கடைகளை மூடவேண்டும்

மக்கள் நல கூட்டியக்கம் விலை வாசி உயர்வு, மக்கள் பிரச்சினை களுக்காக ஒன்று சேர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அக்கோ ரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மக்கள் நல கூட்டு இயக்க தலை வர்களுடன் கலந்து பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு மக்கள் பிரச்சினை களுக்காக நான் போராடி வருகி றேன். ஆனால் என்னை தலித் தலைவராக மட்டுமே முத்திரை குத்தி உள்ளனர்.

மது ஒழிப்புக்காக பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இது கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு அவரை விடுவிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.

SCROLL FOR NEXT