தமிழகம்

ரூ.500 கோடியில் பைனான்ஸ் தொழில்? - திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தன்னிலை விளக்கம்: பொது வாழ்வில் அப்பழுக்கற்றவன் என உருக்கம்

செய்திப்பிரிவு

ரூ.500 கோடியில் பைனான்ஸ் தொழில் நடத்துவதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

தி.மலை மாவட்ட (தெற்கு) திமுக நிர்வாகி ஒருவர், தனது கட்சி பிரமுகருடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளி யாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில், “கம்பன் அப்பா (எ.வ.வேலு), 8 கல்வி நிறுவனங்கள் வைத் துள்ளார். தமிழகத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி உள்ளது. மெடிக்கல் காலேஜ் கட்டுகிறார். கரூரில் 500 கோடி ரூபாய் பைனான்ஸ் விட்டுள்ளார். ஒரு முறை அமைச் சராக இருந்துள்ளார். 6 முறை எம்எல்ஏவாக உள்ளார். 20 ஆண்டு களாக மாவட்டச் செயலாளராக உள்ளார்.

ரத்தத்தை சிந்தி கட்சியை வளர்த்தவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வரவில்லை. எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர், மந்திரியாக இருந்த எ.வ.வேலுவுக் கும், அவரது வாரிசுக்கும் பணி விடை செய்ய வேண்டுமா? திமுக கட்சியா அல்லது நாங்கள் எல்லாம் அடிமை என எழுதிக் கொடுத்து விட்டோமா? ” என்றார். அவரது கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தி.மலையில் உள்ள மாவட்ட திமுக அலுவல கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் எ.வ.வேலு கூறும்போது, “பொது வாழ்வில் நான் செய்யும் தூய்மையான தொண்டை தொடர்ந்து செய்வேன். கருப்பு பூனையை இருட்டில் தேடியது போல், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளத்தில் கடந்த 2 நாட்களாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுபோன்று எதுவும் இல்லை என எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

என் குடும்பத்தாருக்கு ஒரு பள்ளிக்கூடம், ஒரு பாலிடெக்னிக், ஒரு மகளிர் கல்லூரி, ஒரு ஆடவர் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி இவைகள் அனைத்தும், நான் திரைப்படங்கள் மூலமாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு,திமுகவில் இணைவதற்கு முன் பாகவே, சம்பாதித்த பணத்தால் அறக்கட்டளை மூலமாக என் குடும்பத்தினர் மூலம் உருவாக்கப் பட்ட நிறுவனங்கள்.

எனக்கு தமிழகத்தில் நூற்பாலை இல்லை, 6 ஆயிரம் ஏக்கர் நிலம் இல்லை. ரூ.500 கோடியில் பைனான்ஸ் செய்வதாக சொல்லப் படுகிறது. 50 கோடி ரூபாயில் கூட பைனான்ஸ் இல்லை. வருமான வரித்துறையிடம், நான் கணக்கு காட்டியதில் இருந்து, ஒரு சென்ட் இடம் அல்லது பணமோ என்னிட மும், எனது குடும்பத்திடமும் இல்லை. எனது பொது வாழ்வில் நான் அப்பழுக்கற்ற, நேர்மையாக மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பணியாற்று கிறேன். இந்நிலையில் என் மீது தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நான் யார் மீதும் குற்றச்சாட்டை சொல்ல விரும்பவில்லை. சமூகவலைதளத்தில் வரும் தகவலை நான் மறுக்கிறேன்.

தி.மலையில் எங்களது அறக் கட்டளை மூலமாக ஒரு வங்கியில் ரூ.130 கோடி கடன் பெற்று மருத்துவமனையை கட்டி வருகிறேன். சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT