தமிழகம்

மழைக்கு பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

நீரில் மூழ்கி, சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 13-ம் தேதி காஞ்சிபுரம், காலூரைச் சேர்ந்த முரளி, கோனேரி குப்பத்தைச் சேர்ந்த சரத்குமார், 14-ம் தேதி அயிமிச்சேரியைச் சேர்ந்த பிரேமா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வேலூர், ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சாந்தி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். இவர்கள் 4 பேர் குடும்பங்களுக்கும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT