ஒருங்கிணைந்த பொறியாளர் பணியில் உதவி பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்), தொழிற்சாலை பாதுகாப்பு உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் 98 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு 27.7.2014 அன்று நடத்தப்பட்டது. தேர்வின் முடிவு அக்டோபர் 8-ந் தேதி வெளியிடப்பட்டு 27 முதல் 29-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட விண்ணப் பதாரர்களின் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மதிப்பெண் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத் தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளன. இறுதியாக பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.