அப்துல்கலாம் நடத்திவந்த ‘பில்லியன் பீட்ஸ்’ மின்னிதழ் அவரது மறைவுக்கு பின்னர் அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பாக மீண்டும் ராமேசுவரத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், கடந்த 14.11.2007-ம் அன்று ‘பில்லியன் பீட்ஸ்' மின்னிதழைத் தொடங்கி அதன் முதன்மை ஆசிரியாராக செயல்பட்டு வந்தார். இந்த இதழில் 2020-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கான வழிகள் குறித்து, பல கட்டுரைகளை கலாம் எழுதிய துடன் நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோர் குறித்த கட்டுரைகளையும் வெளியிட்டார்.
கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி ஷில்லாங்கில் கலாம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ‘பில்லியன் பீட்ஸ்’ மின்னிதழ் கடந்த மூன்று மாதங்களாக வெளிவராமல் இருந் தது.
இந்நிலையில், அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார் பில், ராமேசுவரத்தில் கலாமின் பூர்விக இல்லத்தில் மாணவர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பில்லியன் பீட்ஸ்’ மின்னிதழின் அச்சுப் பிரதியை அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் வெளியிட 6-ம் வகுப்பு மாணவி அனுஷ்யா முதல் பிரதியைப் பெற்றுக் கொண் டார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ‘பில்லியன் பீட்ஸ்’ இதழை கலாமின் அண் ணனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
மீண்டும் தொடங்கப்பட்ட ‘பில்லியன் பீட்ஸ்’ மின்னிதழில் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், ராணுவ அமைச்சகத்தின் அறிவி யல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி ஆகியோர் வாழ்த்துகளை தெரி வித்துள்ளனர்.
‘பில்லியன் பீட்ஸ்’ மின்னிதழை >https://www.facebook.com/kalamBillionbeats/ இணைய பக்கத்தில் இருந் தும் பதிவிறக்கம் செய்யலாம்.