மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், போலீஸார் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் 4 பேர் காயம டைந்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 2-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். மதுரை பன கல் சாலையில் அரசு ஊழியர் சங்கச்செயலாளர் நீதிராஜா தலைமையில் ஊழியர்கள் நேற்று காலை மறியலில் ஈடு பட்டனர்.
பின்னர் ஊழியர்கள், பூட்டப்பட்டிருந்த ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் கதவை தள்ளிக்கொண்டு நுழைய முயன்றனர். இதை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு காவலர், ஊழியர்கள் அமுதா, நீதிராஜா உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து 85 பேர் கைது செய்யப்பட்டனர்.