தமிழகம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்: விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்பு களைத் தடுக்க குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை உடனடியாக அகற்ற வேண் டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம்.

புதுக்கோட்டையில் நேற்று செய் தியாளர்களிடம் அவர் மேலும் கூறி யதாவது: தமிழகத்தில் குளம், ஏரி, கால்வாய்களை அழித்ததன் காரணமாகவே, தற்போதைய குறைந்த அளவு பருவ மழைக்கே தமிழகத்தில் சுமார் 20 மாவட்டங் களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வெள்ளத்தில் தத்தளிக் கிறது.

இதுகுறித்து ஆட்சியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்திருந்தால், மழையால் தமிழகம் இந்த அளவுக்கு பாதிப் பைச் சந்தித்திருக்காது.

மழை, வெள்ளத்தால் இறப்போ ருக்கு ரூ.10 லட்சம், அழியும் பயிர் களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000-த் துக்கு குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும்.

காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றினால் இதுபோன்ற வெள்ள பாதிப்பை ஓரளவு தடுக்கலாம். அதுமட்டுமின்றி வறட்சி பாதிப்பையும் தடுக்கலாம்.

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைப்பதாக கடந்த 2012-ல் முதல் வர் அறிவித்தபடி அத்திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

நீர்நிலை பகுதிகளில் பட்டா வழங்கியதை ரத்து செய்யவும், நீர்நிலைகளை தூர் வாரவும் வலி யுறுத்தி விரைவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள் ளோம்.

தமிழகத்தில் வெள்ளப் பாதிப்பு குறித்து மத்திய அரசு மவுனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

SCROLL FOR NEXT