தமிழகம்

மக்களிடம் போலீஸார் மரியாதையாக பேச வேண்டும்: சிறப்பு டிஜிபி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சிறப்பு காவல்ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில், போலீஸார் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. விசாரணை நடத்தும் போலீஸார், மக்களிடம் தரக்குறைவாக பேசக் கூடாது. மரியாதையாக பேச வேண்டும்.

போதையில் உள்ளவர்களை கவனத்துடன் கையாள வேண்டும். வழக்கு, புகார்கள் தொடர்பான விசாரணைக்கு முடிந்தவரை மனுதாரர்களை காவல் நிலையங்களுக்கு அழைக்காமல், போலீஸாரே நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT