தமிழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடராவிட்டால் போராட்டம்: தி.க. தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்தை பாஜக அரசு, தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மாணவர் சேர்க்கையில் தற்போதுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதற்கு, ஆய்வு மாணவர்களுக்கும் (எம்டெக் பயோடெக்னாலஜி, எம்டெக் கம்ப்யூட்டெஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும்) 2020-21-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாமல் இருக்கிறோம் என அண்ணா பல்கலைக்கழக உயர் தொழில்நுட்பத் துறை அறிக்கை வெளியிட்டிருப்பதே ஆதாரமாகும்.

69 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு ஏற்க மறுப்பதோடு, உதவித் தொகை பெறும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது. முதல்வர் தலையிட்டு, இவ்வாண்டும் உயர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர ஏற்பாடுசெய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.

SCROLL FOR NEXT