தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நிலக் கடலை செடிகளை அழித்துவிட்டு, மறுசாகுபடி செய்ய தற்போது வயலில் உழவு செய்து வரு கின்றனர் விவசாயிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி அருகே உடையநாடு கிராமத் தில் கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக நெல், நிலக்கடலை, சோளம், உளுந்து, எள் ஆகிய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதனால், அந்த செடிகளை அழித்து விட்டு, மீண்டும் பயிர் சாகுபடி செய்ய வயலை உழவு செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து உடையநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அப்துல்கனி கூறியது: பேராவூரணி சுற்றுவட்டார பகுதியில் நிலக் கடலை சாகுபடியில், அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் நிலக்கடலை விதைக்கப்பட்டது. நிலக்கடலை விதைத்து, 30 முதல், 40 நாட்கள் கடந்த நிலையில், அதன் வேர் பிடிப்பு காலம் தொடங்கியபோது, தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி நிலக்கடலை பயிர்கள் முற்றிலும் சேதமாகி, வீணாகிவிட்டன. மேலும், பயிர்கள் வளர்ச்சி இல்லாமலும், செடியின் வேர்கள் அழுகி காய்ந்தும் காணப் பட்டன.
இதிலிருந்து மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அவற்றை அழித்துவிட்டு, மறு படியும் சாகுபடி செய்து கொள் ளலாம் என முடிவு செய்து, வயல் களில் டிராக்டர் மூலம் உழுது வருகிறோம் என்றார்.