அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா காரைக்கால் சேவா குழு சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் பணி இன்று(ஜன.31) தொடங்கப்பட்டது.
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபா தலைவர் உ.வே.கு.அரங்கநாதாச்சாரியார் சுவாமிகள் நிதியளித்து, நிதி வசூலிக்கும் பணியை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், சேவா குழு அமைப்பாளர் தயாளன், இணை அமைப்பாளர்கள் சக்திமான், முருகதாஸ், ஸ்ரீ கைலாசநாதர், நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், கோயில் முன்னாள் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, பாஜக மாநில விவசாய அணி முன்னாள் தலைவர் எஸ்.இளங்கவோவன், இந்து முன்னணி நாகை மாவட்டத் தலைவர் கே.எஸ்.விஜயன், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிப்.28 ம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் நிதி திரட்டும் பணி மேற்கொள்ளப்படும். ராமர் கோயில் கட்டுமானத்தில் அனைவரின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்ற நோக்கில் இப்பணி மேற்கொள்ளப்படுவதாக சேவா குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
படம்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக, நிதியளித்து, காரைக்கால் மாவட்டத்தில் நிதி வசூலிப்பு பணியை தொடங்கி வைத்த காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபா தலைவர் உ.வே.கு.அரங்கநாதாச்சாரியார்