தமிழகம்

ஆளும் கட்சியினருக்கு சிக்கலை ஏற்படுத்த சிவகங்கையில் உள்ளூர் பிரச்சினைகளை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் பிரச்சினைகளை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் போராடி வருவது ஆளும் கட்சியினருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பிப்ரவரி கடைசி வாரம் (அ) மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி முதல்கட்ட பிரச் சாரத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி கிராமமக்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார்.

இதற்கிடையில், சிவகங்கை மாவட் டத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள உள்ளூர் பிரச்சினைகளை எதிர்க் கட்சிகள் கையிலெடுத்துப் போராடி வருகின்றனர். அந்த வகையில் காரைக்குடியில் இழுபறியில் உள்ள பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் நகராட்சியை வலியுறுத்தி காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, அதே கோரிக் கையை வலியுறுத்தி திமுகவினரும் தனியாகப் போராட்டம் நடத்தினர். மேலும் தேவகோட்டையில் மோச மான சாலைகளைச் சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறையைக் கண் டித்து காங்கிரஸார் போராட்டம் நடத் தினர். அதேபோல் சிவகங்கையில் பெரியாறு தண்ணீர் பிரச்சினை, மானாமதுரையில் வைகை தண்ணீர் பிரச்சினை எனத் தொடர்ந்து உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். தேர்தல் நேரத்தில் உள்ளூர் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கையி லெடுத்துள்ளது ஆளும்கட்சியினருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT