புதுவையில் ஆளுநர், அமைச்சரவை மோதல் உச்சகட்டத்தை அடைந்து முதல்வர், அமைச்சர்களின் உத்தரவுகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தவிர்ப்பது வெளிப் படையாகியுள்ளது.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போராட் டம் அறிவித்தனர். இதையடுத்து கடந்த 7-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகத்தை சுற்றிலும் தடுப்புகட்டைகள் அமைக்கப் பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
பாரதி பூங்கா காலவரை யின்றி பூட்டப்பட்டது. துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆளுநர் மாளிகையை சுற்றிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட் டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் தர்ணா போராட்டம் முடிந்த பிறகும் தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலை பகுதிகளில் இரும்பு கம்பிகளுடன் கூடிய தடுப்புகள் நீடிக்கிறது. நவீன ஆயுதங்கள் கூடிய வாகனங்களுடன் துணை ராணுவத்தினர், போலீஸார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
பேரிடர் மேலாண்மை கூட் டத்தை கூட்டி தடுப்புகளை அகற் றவும், ‘துணை ராணுவத்தினரை யாரை கேட்டு அழைத்தீர்கள்? 144 தடை உத்தரவு கேட்காமல் போட் டது ஏன்?, என்று ஆட்சியருக்கு முதல்வர் கேள்வி எழுப்பியும் இதுவரை பதில் இல்லை. ஆளுநர் மாளிகையை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதிகளில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட செல்லமுடியாத நிலை உள்ளது. அமைச்சர் கந்தசாமி தானே பாரதி பூங்காவுக்கு சென்று திறந்தார். ஆனால் உடனே பூங்கா பூட்டப்பட்டது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “பாரதி பூங்கா, கடற்கரை பகுதிச் சாலைகள் 3 வாரங்களாக மூடியுள்ளன. அருங்காட்சியகம், ரோமன் ரோலண்ட் நூலகம் செல் லவே முடிவதில்லை. குறிப்பாக சட்டப்பேரவைக்கு மக்கள் வரு வது நின்றுவிட்டது. முதல்வர், அமைச்சர்கள் உத்தரவுகளை ஆளுநரும், போலீஸாரும் மதிப்பதே இல்லை என்பது தெளிவாகிறது. அரசு செயலர்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது வெளிப் படையாகியுள்ளது” என்று குறிப் பிட்டனர்.
அமைச்சர்கள் துறை திட்டங்கள், செயல்பாடு பற்றி செய்தியா ளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், இம்முறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீன்வளத் துறை பற்றியும், அமைச்சர் ஷாஜகான் போக்குவரத்துத்துறை பற்றியும் அந்தந்த துறை செயலர்களை சந்தித்து புதிய அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள் ளனர். அமைச்சர்களோ மவுனம் காக்கின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க்கிடம் கேட்டதற்கு, “பாரதி பூங்கா, சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்பு என கூறுகிறீர்கள். காவல்துறையினர் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறியதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையிடம் கலந்துபேசி முடிவெடுப் போம்” என்று குறிப்பிட்டார்.