குருப்-2ஏ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரூப்-2ஏ தேர்வுக்கு (நேர்காணல் அல்லாத பணிகள்) ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நிரந்தரப்பதிவு அவசியம் என்பதாலும், நிரந்தரப் பதிவை முடித்து பதிவுக்கட்டணம் செலுத்திய பிறகே விண்ணப்பிக்க முடியும் என்பதாலும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 18-ம் தேதி வரையும், தேர்வுக் கட்டணம் செலுத்த 20-ம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. பழைய முறைப்படி நிரந்தரப்பதிவு செய்தவர்கள் அதாவது, 29.9.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நிரந்தரப்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் ஏற்கெனவே பெற்ற பயனாளர் குறியீடு (யூசர் ஐடி), பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி புதிய முறை நிரந்தரப்பதிவில் தங்களின் சுயவிவரப் பக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுவரை நிரந்தரப்பதிவு செய்யாதவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான 18-ம் தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னரே நிரந்தரப்பதிவு செய்து உரிய கட்டணத்தை செலுத்தி தங்களின் சுயவிவரப் பக்கத்தை ஏற்படுத்தி விண்ணப்பிக்க வேண் டும். அதன்பிறகு, தேர்வுக் கட்ட ணத்தை ஆன்லைனில் நெட் பேங் கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.