தமிழகம்

தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்: விஜய பிரபாகரன் தகவல்

செய்திப்பிரிவு

தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என, விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தனித்துப் போட்டியிட பயமில்லை

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆகவே, எங்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். தேமுதிக 2006-ம் ஆண்டுதேர்தலில் தனித்து போட்டியிட்டுஉள்ளது. ஆகவே, வருகிற தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டாலும் தேமுதிகவுக்கு பயமில்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT