தமிழகம்

திண்டிவனம் பகுதியில் இரு பிரிவுகளாக ஸ்டாலினை வரவேற்ற திமுகவினர்

செய்திப்பிரிவு

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’என்ற நிகழ்ச்சியை திருவண்ணா மலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்குகிறார்.

இதற்காக நேற்று மாலை சென் னையில் இருந்து காரில் புறப்பட்ட ஸ்டாலினுக்கு திண்டிவனம் புறவழிச்சாலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட திமுகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

அடுத்த ஒரு கிலோமீட்டரில் திண்டிவனம் சந்தைமேடு பகுதி யில் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, திண்டிவனம் நகர செயலாளர் கபிலன், வடக்குமாவட்ட இளைஞரணி அமைப் பாளர் கண்ணன் ஆனந்த் உள்ளிட்ட திமுகவினர் திரண்டு ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

திண்டிவனம் தொகுதியில் இருஇடங்களில் இரு பிரிவுகளாக திமுகவினர் வரவேற்பு அளித்த நிலையில், மயிலம் தொகுதிக் குட்பட்ட தீவனூரில் எம்எல்ஏ மாசிலாமணி தலைமையிலும், செஞ்சியில் நகர செயலாளர் காஜா நஜீர்,ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலை மையிலும் வரவேற்றனர்.

தொகுதிக்கு ஒரு இடத்தில் மட்டுமே வரவேற்பு நிகழ்ச்சி எனவடக்கு மாவட்ட திமுக அறிவித்த நிலையில் திண்டிவனம் தொகுதிக் குட்பட்ட இரு இடங்களில் திமுகவினர் பிரிந்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT