தமிழக நெடுஞ்சாலைத் துறை செயல ராக இருந்த ராஜீவ் ரஞ்சன், கடந்த 2018-ல் மத்திய அரசுப் பணியில் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை செயலராக உள்ளார்.
இந்நிலையில், ராஜீவ் ரஞ்சனை மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு அனுப் பும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. இதற்கு மத்திய அமைச் சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால் அவர் விரைவில் தமிழகம் திரும்பு கிறார்.
தமிழக தலைமைச்செயலராக உள்ள கே.சண்முகத்தின் பதவிக்காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழக அரசுப் பணிக்கு திரும்பும் ராஜீவ் ரஞ்சன், புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர், செப்டம்பரில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.