தமிழகம்

ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் அறிமுகம்

செய்திப்பிரிவு

கவிஞர் வைரமுத்து நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஷார்ஜா மன்னர் ஷேக் சுல்தான் பின் முகமது ஏற்பாடு செய்துள்ள 34வது சர்வதேச புத்தகத் திருவிழா’வில் 60 நாடுகளில் இருந்து 1250 பதிப்பாளர்கள் பங்குபெறுகிறார்கள். இதில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் நூல் அறிமுக விழா நவம்பர் 13-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்தியத் தூதர் சீதாராம் நூலை அறிமுகம் செய் கிறார். வைரமுத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

இதற்கு முன் நடந்த விழாக் களில் டான் பிரவுன், அருந்ததிராய், அப்துல்கலாம், சேத்தன்பகத், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி.குரூப், ரஸ்கின் பாண்ட், டெர்ரி ஓ பிரெய்ன் ஆகிய உலகப் புகழ்மிக்க படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொள்ளும் வைரமுத்து, உலகச் சிறுகதைகள் குறித்தும் தொழில் நுட்ப யுகத்தில் இலக்கியத்தின் தேவை குறித்தும் உரையாற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT