ஆலோசனைக் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் | படம்: ஜெ.மனோகரன். 
தமிழகம்

மேற்கு மண்டலத்தில் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்: சீமான் அறிவிப்பு

த.சத்தியசீலன்

கோவையில் மேற்கு மண்டலத்தில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம், கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கோவை மேற்கு மண்டலத்தில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:

கோவை

கோவை தெற்கு - தமிழ்செல்வன் (எ) அப்துல்வகாப்
கோவை வடக்கு - பாலேந்திரன்,
சிங்காநல்லூர் - நர்மதா,
கவுண்டம்பாளையம் - கலாமணி,
கிணத்துக்கடவு - உமா ஜெகதீஷ்,
சூலூர் - இளங்கோவன்,
மேட்டுப்பாளையம் - யாஷ்மின்,
தொண்டாமுத்தூர் - கலையரசி,
பொள்ளாச்சி - லோகேஸ்வரி,
வால்பாறை-கோகிலா.

நீலகிரி

உதகை - ஜெயக்குமார்,
கூடலூர் - கேதீஸ்வரன்,
குன்னூர் - சரண்யா.

திருப்பூர்

திருப்பூர் தெற்கு - சண்முகசுந்தரம்,
திருப்பூர் வடக்கு - ஈஸ்வரன்,
அவிநாசி - சோபா,
தாராபுரம் - ரஞ்சிதா சுரேஷ்,
மடத்துக்குளம் - சனுஜா,
பல்லடம் - கரிகாலன் (எ) சுப்பிரமணியன்,
காங்கேயம் - சிவானந்தம்,
உடுமலை - பாபு ராஜேந்திர பிரசாத்.

ஈரோடு

ஈரோடு மேற்கு - சந்திரகுமார்,
ஈரோடு கிழக்கு - கோமதி,
அந்தியூர் - சரவணன்,
பெருந்துறை - லோகநாதன்,
மொடக்குறிச்சி - லோகு பிரகாஷ்,
பவானி - சத்யா,
பவானிசாகர் - சங்கீதா,
கோபிச்செட்டிபாளையம் - சீதா லட்சுமி.

SCROLL FOR NEXT