தமிழத்துக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 20 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வேளச்சேரி பகுதியில் அருணாச்சல நகர், மல்லிகைப்பூ நகர், கோவிந்தராஜபுரம், அவ்வை நகர், லட்சுமிபுரம், தரமணி, பெரியார் நகர், தேவி கருமாரியம்மன் நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்தார். அப்போது நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பாய், போர்வை போன்ற பொருட்களை அவர் வழங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:
மழைக்கு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். நிவாரணப் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் நாங்கள் இதனை அரசியலாக்கவில்லை. மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்துக்கு திமுக, அதிமுக இரண்டும் கட்சிகளுமே காரணம் என்றார்.