தமிழகம்

இலங்கை வசம் 37 மீனவர்கள்; 55 படகுகள் - தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம்

செய்திப்பிரிவு

இலங்கை பிடியில் இருக்கும் 37 மீனவர்கள் மற்றும் 55 படகுகளை மீட்பதுடன், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 29-ம் தேதி (நேற்று) அதிகாலை 2 படகுகளில் சென்ற ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ் வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் காலம் கால மாக பாக்ஜல சந்தி பகுதியில் அவர்களுக்கான பாரம்பரிய இடத்தில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், அப்பகுதியில் இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய் வதும், தாக்குவதும் தொடர்கிறது. இதை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழக மீனவர்களின் இந்த அவல நிலையை போக்கும் விதமாக ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக நாட்டில் முதல் முறையாக புதிய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க ரூ.30 லட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது 171 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 581 மீனவ குடும்பங்கள் பயன்பெறும். ஆழ்கடல் மீன்பிடி பணிகளை தொடர, கடல் ஆழப் படுத்தும் பணிகளுக்காக ஆண்டு பராமரிப்புக்கு ரூ.10 கோடி உட்பட ரூ. ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிதித்தொகுப்பு கேட்கப்பட்டது. அதை விரைவில் அளிக்க வேண் டும். மீனவர்களை விடுவித்தாலும் அவர்களது வாழ்வாதாரமான படகு கள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை விடுவிப்ப தில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து இலங்கை அரசு கடைப் பிடித்து வருகிறது. இவற்றை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வடகிழக்கு பருவமழையால் அவை முற்றிலும் சேதமடையும் வாய்ப்புள்ளது.

எனவே, தங்களுக்கு உரிமை யுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும், இலங்கை அதிகாரிகளுடன் பேசி, தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர் கள் உட்பட இலங்கை வசம் இருக் கும் 37 மீனவர்கள் மற்றும் 55 படகு களை மீட்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT