ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதில் அதிமுக மற்றும் திமுக இடையே வழக்கம்போல் மோதல் ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந் தாண்டு நடைபெற்ற குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்று வதில் அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் பள்ளி வளாகத்தில் நேற்று குவிக்கப்பட்டனர்.
காவல்துறையினர் கணித்தது போல், பள்ளியில் நேற்று நடை பெற்ற குடியரசு தின விழாவிலும் மோதல் ஏற்பட்டது. பள்ளி வளாகத் தில் தேசிய கொடியை ஏற்ற வந்த திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஷர்மிளா தரணியை, அதிமுகவைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சம்பத் தலைமையிலான அதிமுகவினர் தடுத்தனர். திமுகவைச் சேர்ந்தவர் தேசிய கொடியை ஏற்றக் கூடாது, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்தான் ஏற்ற வேண்டும் என்றனர். இதனால், இரண்டு தரப் புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், தேசியக் கொடியை வழக்கம் போல் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி ஏற்றினார்.
அப்போது, பள்ளி வளாகத் துக்குள் அதிமுக மற்றும் திமுகவினர் செல்ல முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளியின் கதவு மூடப்பட்டது. பின்னர், தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கும் அதிமுகவை கண்டித்தும் மற்றும் பள்ளிக்குள் அழைத்துவிட்டு, திடீரென கதவை மூடிய காவல்துறையை கண்டித்தும் ஆரணி – வேலூர் சாலையில் மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர் களிடம், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.