தமிழகம்

கருணாநிதியுடன் மகஇக பாடகர் கோவன் சந்திப்பு

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை மக்கள் கலை இலக்கிய கழகத்தின் (மகஇக) பாடகர் கோவன் நேற்று சந்தித்தார்.

மதுவுக்கு எதிராக பாடல்கள் பாடிய மகஇக பாடகர் கோவன் கடந்த மாதம் தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத் தைகள், இடதுசாரி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளி யிட்டிருந்தனர்.

இந்நிலையில் கருணாநிதி, இளங்கோவன் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக செய்தியா ளர்களிடம் கோவன் கூறியதாவது:

‘மூடு டாஸ்மாக்கை’ என்ற பாடலை பாடியதற்காக தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட நான் இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளேன். எனது ஜாமீனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

மதுவின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் அடுத்த மாதம் சென்னையில் மகஇக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு பாஜக, அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளையும் அழைக்க இருக்கிறோம். அதற்கு அழைப்பு விடுக்கவே கருணாநிதி, மு.க.ஸ்டாலின், இளங்கோவன், திருமாவளவன் ஆகியோரை சந்தித்தேன். விரைவில் மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து மதுவிலக்கு பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT