அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
2016 மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் மூலமாக நவம்பர் 16 முதல் 27-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (>www.tndge.in) வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் தேர்வுக்கூட நுழைவுச்சீட் டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே, ஒப்புகைச்சீட்டை தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.