சர்வதேச அளவிலான 7-வது இந்தோ- நேபாள கிராமப்புற இளை ஞர் விளையாட்டு போட்டியில் இரட்டையர் பேட்மின்டனில் திருச்சியைச் சேர்ந்த மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.
நேபாள நாட்டிலுள்ள போகா ராவில் 7-வது இந்தோ-நேபாள கிராமப்புற இளைஞர் விளையாட்டு (2020-21) போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. கடந்த 21-ம் தேதி நடைபெற்ற சீனியர் இரட்டையர் பேட்மின்டன் போட்டியில் திருச்சி தேசியக் கல்லூரியின் பி.எஸ்சி உடற்கல்வி முதலா மாண்டு மாணவர் ஜே.சந்தோஷ், சத்தியபாமா பல்கலைக்கழக மாண வர் ஆர்.தர்சன்குமார் ஜோடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். இவர்கள் இருவருமே திருச்சியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் நேபாளத்திலி ருந்து ரயில் மூலம் ஊர் திரும்பிய சந்தோஷ், தர்சன்குமார் ஆகியோ ருக்கு நேற்று திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசியக் கல்லூரி முதல்வர் சுந்தரராமன், கல்லூரி துணை முதல்வர் மற்றும் உடற்கல்வி துறை தலைவர் பிரசன்ன பாலாஜி, பேராசிரியர் ஜாபிர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.