பலத்தக் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று வடகிழக்கு திசையில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மூலமாகவும் மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.