சிவகங்கை மாவட்டத்தில் 100 கண்மாய்கள் நிரம்பாத நிலையில் விதிமுறையை மீறி வைகை உபரி நீரை அனுமதியில்லாத பகுதிகளுக்கு திறந்துவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வைகை நதி மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 374 கண்மாய்கள் மூலம் 1.36 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. வைகை நீரில் மதுரை குடிநீர் தேவை, நீர் ஆவியாதல் போன்ற இழப்பு ஆகியவற்றை கழித்தது போக மீதியில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 7 பங்கு, சிவகங்கை மாவட்டத்துக்கு 3 பங்கு, மதுரை மாவட்டத்துக்கு 2 பங்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.
அதன்படி, முதற்கட்டமாக ராமநா தபுரம் மாவட்டத்துக்கு கடந்த நவ.31 முதல் டிச.12-ம் தேதி வரை 1,036 மில்லியன் கன அடியும், சிவகங்கை மாவட்டத்துக்கு டிச.7 முதல் டிச.12 வரை 449 மில்லியன் கன அடியும் திறக்கப்பட்டன. இதன்மூலம் சிவகங்கை மாவட் டத்தில் கானூர், மாரநாடு, பிரம்பனூர், பழையனூர், லாடனேந்தல், பாப் பாங்குளம், பொத்தங்குளம், திருப் பாச்சேத்தி, பெத்தானேந்தல், சடங்கி உள்ளிட்ட 100 கண்மாய்கள் 20 முதல் 30 சதவீதத்துக்கும் குறைவாகவே நிரப்பப்பட்டன. இதை நம்பி, அப்பகுதியில் சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் வைகை அணை முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உபரிநீரை சிவ கங்கை மாவட்டக் கண்மாய்களுக்கு திறந்துவிடாமல், அனுமதியில்லாத பகுதிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி ஆதிமூலம் கூறியதாவது: விரகனூர், பார்த்திபனூர் மதகு அணை இடையே சிவகங்கை மாவட் டத்துக்குரிய 100 கண்மாய்கள் நிரம் பவில்லை. மேலும் பார்த்திபனூர் மதகு அணையில் இடது பிரதான கால்வாய் மூலம் பயன்பெறும் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த 40 கண்மாய்களில் 10 சதவீதம் கூட தண்ணீர் இல்லை.
பழைய ஆயக்கட்டு கண்மாய்கள் நிரம்பாத நிலையில் அனுமதியில்லாத பகுதிகளுக்கு உபரிநீரை திறந்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் தாமதமாகவே விவசாயிகள் பணிகள் தொடங்கியுள்ளனர். ஆனால் பொதுப்பணித்துறை அதி காரிகள் சிவகங்கை மாவட்டத்தில் பயிர்கள் விளைந்துவிட்டதாக பொய் யான தகவலை கூறி, தண்ணீரை வேறு பகுதிகளுக்கு திறந்து வருகின்றனர், என்றார்.