தமிழகம்

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து பார் கவுன்சில் தலைவர் தற்காலிக நீக்கம்: சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டுள்ளார்.

இதற்கான தீர்மானம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உடல் நலக்குறைவு காரணமாக மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதால், சங்க துணைத் தலைவர் கினி இமானுவேல் தலைமையில் இக்கூட்டம் நடை பெற்றது. இதில், பெரும்பான்மை வழக்கறிஞர்களின் கருத்துகள் மற்றும் போராட்ட வழிமுறைகள் குறித்து கருத்து கேட்கப் பட்டது. பின்னர் இக்கூட்டத் தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு, ஏகமனதாக நிறை வேற்றப்பட்டன.

தீர்மானங்கள் விவரம்

தமிழ்நாடு பார் கவுன்சில் என்ற அமைப்பானது வழக் கறிஞர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதாகும். ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் மீது பெறப்பட்ட புகாரின் மீது எவ்வித விளக்கமும் கேட்காமலும், அதுபோல வழக் கறிஞர்கள் குழும பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்துகளுக்கு மாறாக வழக்கறிஞர்கள் 8 பேர் மீது நவம்பர் 26 அன்று விதித்த இயற்கை நெறிமுறைகளுக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகளை சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், சங்கரசுப்பு ஆகியோர் சந்தித்து இதுவரை இடைக்கால தடை விதிக்கப்பட்ட அனைத்து வழக்கறிஞர்களின் தடையையும் மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் மீது விதிக்கப்பட்ட தவறான இடைக்காலத் தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், வழக்கறிஞர்களின் நலனுக்கு எதிராகவும், தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தொடர்ச்சியாக சட்ட விரோத உத்தரவுகளை பிறப் பித்து வருவதாலும் இந்த மாமன்றம் அவரை வன்மையாக கண்டிக்கிறது. இந்த செயல் களுக்காக டி.செல்வம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT