தமிழகம்

பழைய பள்ளி கட்டிடம் மழையில் இடிந்தது

செய்திப்பிரிவு

சென்னையில் பழைய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது.

சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் கல்லூரியின் பின்புறம் மதரசா பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூட வளாகத் தில் ஒரு பழமையான கட்டிடம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கட்டிடத்தில் பள்ளி வகுப்பறைகள் இருந்தன. இந்த கட்டிடம் பலம் இழந்து விட்டது என்று கூறப்பட்டதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த கட்டிடத்தைப் பூட்டி, அபாயகரமான பகுதி, கட்டிடம் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இங்கு இருந்த வகுப்பறைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்த கட்டிடம் மேலும் பலவீனம் அடைந்து, நேற்று காலையில் திடீரென இடிந்து விழுந்தது. தகவலின்பேரில் தீயணைப்பு துறை இணை இயக்குநர் எஸ்.விஜயசேகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றி யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று பார்த்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் இடிபாடுகளில் சிக்கவில்லை.

இந்த கட்டிடம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, ‘சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடம் கட்டப்பட்டது. சென் னையில் உள்ள மிகப் பழமை யான கட்டிடங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று. இதனால் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் களின் கட்டுப்பாட்டில் இந்த கட்டிடம் இருந்தது’ என்றனர்.

SCROLL FOR NEXT