சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 125-வது ஆண்டு விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர்களது குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி காலை தொடங்கியது. சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், துணைத் தலைவர் கே.கினி மானு வேல், செயலாளர் எஸ்.அறிவழகன், பொருளாளர் எஸ்.காமராஜ் முன்னிலை வகித்தனர். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை உரையாற்றினார்.
அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரியத் தலைவரான முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையத் தலைவரான முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் சிறப் புரையாற்றினர். முன்னதாக, சங்கத் தின் நூலகர் ஆர்.கிருஷ்ணகுமார் வரவேற்றார். மூத்த செயற்குழு உறுப்பினர் கே.கோபால் நன்றி கூறினார்.
பிற்பகலில் நடந்த நிறைவு விழா வில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமை உரையாற்றினார். அவர் பேசும் போது, ‘‘இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கு இனிமேல் போட்டியிட மாட்டேன். அதேநேரம், சங்கத்துக் காகவும், வழக்கறிஞர் நலனுக்காக வும் தொடர்ந்து பாடுபடுவேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.என்.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட னர். 25, 50 ஆண்டுகளாகப் பணி யாற்றிவரும் மூத்த வழக்கறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.