திண்டுக்கல் மாவட்டத்தில் டிராக்டர் ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் வழக்குப்பதிவு செய்வதுடன் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜனவரி 26 ம் தேதி ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் வாகனங்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாடுமுழுவதும் கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு 144 பிறப்பிக்கப்பட்டநிலையில் மக்கள் கூடும் போராட்டங்களை ஏற்பாடும் செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போராட்டத்தில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.