தமிழகம்

அப்துல் கலாம் அஞ்சல்தலை: நாளை வெளியீடு

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த நாளான அக். 15-ம் தேதி அவரது நினைவாக அஞ்சல்துறை சார்பில் ராமேசு வரத்தில் அஞ்சல்தலை வெளி யிடப்பட உள்ளன.

அப்துல் கலாம் நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண் டும் என அஞ்சல்தலைகள் சேகரிப்பாளர்கள் சங்கம், சமூக இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அப்துல் கலாமுக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிடப் படும் என கடந்த மாதம் அறிவித் திருந்தார்.

இது குறித்து கலாமின் பேரன் ஷேக் சலீம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: அஞ்சல் துறையின் சார்பில் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக். 15-ம் தேதி புதுடெல்லி மற்றும் ராமேசுவரத்தில் கலாமின் அஞ்சல்தலைகள் வெளி யிடப்பட உள்ளன. நிகழ்ச்சியில் கலாமின் அண்ணன் முத்து மீரா லெப்பை மரைக்காயர் அஞ்சல் தலைகளைப் பெற்றுக் கொள்கிறார் என்றார்.

முன்னதாக கலாமின் உருவம் பொதித்த அஞ்சல்தலையை சாய்தோம் பிரின்சிபல் ஐலாண்ட் என்ற நாடு கடந்த 2009 ஆண்டிலேயே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT