தமிழகம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

`அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

பாமக தென்மண்டல அரசியல் மாநாடு நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி பொருட்காட்சித் திடலில் நடைபெற்றது. துணை பொதுச்செயலாளர் நிஸ்தார் அலி தலைமை வகித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அன்புமணி ராம தாஸ் பேசியதாவது: தமிழகத்தை அதிமுக, திமுகவிடமிருந்து மீட்க வேண்டும், ஊழல், மது இல்லாத புதியதோர் தமிழகத்தை படைக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. தமிழக மக்கள் மவுனப் புரட்சிக்கு தயாராகிவிட்டனர். அனைவரும் பாமகவை ஆதரிக்கத் தயாராகிவிட்டனர்.

சட்டப்பேரவையில் 110 வது விதியின்படி ஏராளமான அறிவிப்பு களை ஜெயலலிதா வெளியிட்டார். அத்திட்டங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி. ஆனால், தமிழகத்தின் மொத்த வருமானமே, ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிதான். இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வர இருப் பதால், மக்களை ஏமாற்றும் விதத் தில் இந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின், மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறுகிறார். திமுகவினர் நடத்தி வரும் மது ஆலைகளை அவரால் உடனடியாக மூட முடியாது. ஏனென்றால், அந்த ஆலைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. என் மீதான வழக் கில் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் கிடை யாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி யால் தற்போது பொய் வழக்கு போட்டுள்ளார்கள் என்றார்.

ராமதாஸ்

மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “மொழி, இனம், கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த பாமகவுடன் ஒப்பிடும் அளவுக்கு வேறு கட்சிகள் தமிழ கத்தில் இல்லை. தமிழர்களுக்காக, தமிழுக்காக என்னைவிட போராடி யவர்கள் யார்? எங்களை வீழ்த்த நினைக்கும் சூழ்ச்சி பலிக்காது” என்றார்.

SCROLL FOR NEXT