ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய உளவுப் பிரிவினரால் விசாரிக்கப் பட்டவர், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டார்.
காரைக்கால் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் சிராஜ் தவுலத். இவரை மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார், கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மத்திய அரசின் டிராய் அமைப் பில் அதிகாரி என்று கூறி வாட கைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் காரைக்காலில் தங்கியிருந்த இவரது நடமாட்டம், பின்னணி குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், இவரிடம் விசாரணை நடத்தப்பட் டது.
இவர் தனியார் தொலைபேசி நிறுவனத்தில் வேலைபார்த்த அனுபவத்தைக் கொண்டு, பல முக்கியப் பிரமுகர்களின் தொலை பேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதும், பலரை வேலைக் காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிந் துள்ளது. மேலும், சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளவராகக் கருதப்படும் இக்மா சாதிக் என்பவருடன் இவ ருக்கு சிறையில் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அப்துல் சிராஜ் தவுலத் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. இவரைத் தேடி காரைக்காலுக்கு இக்மா சாதிக் பலமுறை வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் காரணங்களால் அப்துல் சிராஜ் தவுலத்தை விசாரணைக்கு அழைத்துச் சென்று,
ஒரு நாள் முழுவதும் மத்திய உளவுப் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். எனினும், தீவிர வாத தொடர்பு குறித்து அவர் எந்த தகவலையும் கூறவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து அவர் காரைக் கால் போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அவர் மீது கூட்டுச் சதி, ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார், காரைக் கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.
இவர் பல முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதும், பலரை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிந்துள்ளது.