“திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.62-க்கு விற் பனையானது. தற்போதைய அதிமுக ஆட்சியில் ரூ.220-க்கு விற்பனையாகிறது” என சேலத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலம், கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை திடலில் இருந்து ‘நமக்கு நாமே விடியல் மீட்பு’ 3-வது கட்ட பயணத்தை மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு பயனுள்ள வகையில் எந்த திட்டமும் தற் போதைய அரசு செயல்படுத்த வில்லை. அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை முதல்வரின் புகழ் பாடுவதையே கொள்கையாக வைத்துள்ளனர்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப் பட்ட பல திட்டங்களை முடக்கியதே அதிமுக அரசின் நான்கரை ஆண்டு கால சாதனை. டிஜிட்டல் மீட்டர் பொருத்தி மின்கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மின்வெட்டும் உள்ளது. இதனால், விசைத்தறி நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கங் களில் பாவு வழங்கப்படாததால் கைத்தறி நெசவாளர்களும் பாதிப் படைந்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து சங்ககிரியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந் தார். அப்போது ஸ்டாலின் பேசிய தாவது: திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.62-க்கு விற்றது. அதிமுக ஆட்சியில் ரூ.220-க்கு விற்பனையாகிறது. இதேபோல் திமுக ஆட்சியில் ஒரு கிலோ பாசிபருப்பு ரூ.44-க்கும், கடலை பருப்பு ரூ.38, மிளகாய் ரூ.40, மல்லிதூள் ரூ.60, நல்லெண்ணெய் லிட்டர் 84, உளுந்தம் பருப்பு ரூ.56-க்கு விற்றது.
அதிமுக ஆட்சியில் பாசிபருப்பு ரூ.130, கடலை பருப்பு ரூ.95, உளுந்தம்பருப்பு ரூ.190, மிளகாய் கிலோ ரூ.140, மல்லி தூள் ரூ.160, நல்லெண்ணெய் லிட்டர் ரூ.220 என இரண்டு, மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது.
எங்கள் ஆட்சியிலும் விலை ஏற்றம் இருந்தது. ஆனால், அதை நாங்கள் கட்டுக்குள் வைத்திருந் தோம். பேருந்து கட்டணத்தை 5 ஆண்டுகளில் ஒரு போதும் நாங்கள் ஏற்றவில்லை.
தற்போது, மின்சாரம், பால், பேருந்து கட்டணம் என சகலவிதமானவையும் விலை ஏற்றம் கண்டுள்ளது என்றார்.