தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் 13.33 லட்சம் வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

அசோக் குமார்

தென்காசி மாவட்டத்தில் 6,53,540 ஆண் வாக்காளர்கள், 6,80,262 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 78 பேர் என மொத்தம் 13,33,880 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,91,681 ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து, 1.1.2021-ம் தேதியைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

16.11.2020 முதல் 15.12.2020 வரை இணையவழி மூலமாகவும், சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியல் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெயர் சேர்க்க 44,630 விண்ணப்பங்கள், நீக்கம் செய்ய 2,431 விண்ணப்பங்கள், திருத்தம் செய்ய 9,972 விண்ணப்பங்கள், ஒரே தொகுதியில் இடம் மாற்ற 3,021 விண்ணப்பங்கள் என மொத்தம் 60,054 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, தென்காசி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் சமீரன் வெளியிட்டார். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 6,53,540 ஆண் வாக்காளர்கள், 6,80,262 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 78 பேர் என மொத்தம் 13,33,880 வாக்காளர்கள் உள்ளனர்.

சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1,22,739 ஆண் வாக்காளர்கள், 1,30,195 பெண் வாக்காளர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,52,939 வாக்காளர்கள் உள்ளனர். வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1,18,227 ஆண் வாக்காளர்கள், 1,22,101 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 49 பேர் என மொத்தம் 2,40,367 வாக்காளர்கள் உள்ளனர்.

கடையநல்லூர் தொகுதியில் 1,43,484 ஆண் வாக்காளர்கள், 1,45,416 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேர் என மொத்தம் 2,88,909 வாக்காளர்கள் உள்ளனர். தென்காசி தொகுதியில் 1,42,974 ஆண் வாக்காளர்கள், 1,48,532 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் என மொத்தம் 2,91,524 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆலங்குளம் தொகுதியில் 1,26,116 ஆண் வாக்காளர்கள், 1,34,018 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேர் என மொத்தம் 2,60,141 வாக்காளர்கள் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 740 இடங்களில் மொத்தம் ,1504 வாக்குச்சாவடிகள் உள்ளன.

நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மரகதநாதன், தேர்தல் வட்டாட்சியர் அமிர்தராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT