வருகின்ற 30-ம் தேதி ’அம்மா திருக்கோயில்’ திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கிராமம் தோறும் வீடுவீடாக்ச் சென்று மக்களுக்கு நேரில் அழைப்பு விடுத்தார் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி. குன்னத்தூர் அருகே கழக அம்மா பேரவை சார்பில் அமைச்சர்ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெஜயலலிதா ஆகியோருக்கு தலா 7 அடிக்கு மேல் முழு நீள வெண்கல சிலை அமைத்து கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது
கடந்த தைப்பொங்கலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதிஷ்டை செய்தனர். தற்போது தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வரும் வேளையில் வருகின்ற 30ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்று திறப்பு விழா செய்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்கவுள்ளனர்
அதனைத் தொடர்ந், திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நேரடியாகச் சென்று அம்மாவின் திருக்கோவில் கும்பாபிஷேகப் பத்திரிகையை வழங்கி குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர் வி உதயகுமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்
இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் எஸ் சரவணன் எம்எல்ஏ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே தமிழரசன், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி ,ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஏ கே பி சிவசுப்பிரமணியன், மாவட்ட அணி நிர்வாகிகள் பால்பாண்டி, வக்கீல் தமிழ்ச்செல்வன், லட்சுமி, காசிமாயன், சிங்கராஜ பாண்டியன், மகேந்திர பாண்டியன், ஆர்யா, போத்தி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்