தமிழகம்

எஸ்ஆர்எம் பல்கலை. மாணவர்கள் 6,064 பேருக்கு ஐடி நிறுவனங்களில் நியமன ஆணை: வளாக நேர்முகத் தேர்வில் கிடைத்தது

செய்திப்பிரிவு

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொறி யியல் மாணவர்கள் 6 ஆயிரத்து 064 பேருக்கு இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களில் வளாக நேர்முகத் தேர்வு மூலம் வேலை கிடைத்திருப்பதாக அதன் வேந்தர் பாரிவேந்தர் கூறினார்.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு இன்போசிஸ், காக்னிசன்ட், டிசிஎஸ், விப்ரோ ஆகிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்தவாரம் வளாக நேர்முகத் தேர்வு நடத்தின. இதில் 6 ஆயிரத்து 064 பேர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை அடுத்த பொத்தேரி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, பல் கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் பேசியதாவது:

இன்போசிஸ், காக்னிசன்ட், டிசிஎஸ், விப்ரோ ஆகிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்முகத் தேர்வு மூலமாக 6 ஆயிரத்து 064 பேர் ஒரே நாளில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனை. இந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கும், வேலைவாய்ப்புக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம்.

எனவே, எங்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் திறமைமிக்கவர்களாக உள்ளனர். கல்வித் தரத்தில் சிறப்பிடம் பெறு வது மட்டுமின்றி மாணவர் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத் திக் கொடுப்பதிலும் இப்பல்கலைக் கழகம் முன்னணியில் திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

துணைவேந்தர் பக்ஷி பேசும் போது, “எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் இன்றைய சூழலுக் கேற்ப பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றார்.

விப்ரோ நிறுவனத்தின் இந்திய தலைவர் விஸ்வநாதன் பேசும் போது, “சிறந்த மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் எப்போதும் வேலைவாய்ப்பு இருக்கும்’’ என்றார்.

டிசிஸ் நிறுவனத்தின் அதிகாரி விக்னேஷ், காக்னிசன்ட் நிறுவன அதிகாரி அசோக், இன்போசிஸ் நிறுவன அதிகாரி தினேஷ், ஆகி யோர் இந்த வளாக நேர்முகத் தேர்வு குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு ஏற்பாட்டு அதிகாரி கணபதி பேசும்போது, “மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் வளாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் நடைபெற்ற வளாக நேர்முகத் தேர்வில் டெல், பிலிப்கார்ட், அமேசான், பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் 18 லட்சம் வரை சம்பளத்தில் 621 பேருக்கு வேலை கிடைத்தது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இயக்குநர் முத்தமிழ்ச் செல்வன், இணை துணைவேந்தர்கள் டி.பி.கணேசன், தங்கராஜு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

SCROLL FOR NEXT