பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, நேற்று பலர் சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் திரும்பியதால், சேலம் கருப்பூர் சுங்கச் சாவடியில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற கார்கள். படம்: எஸ். குரு பிரசாத் 
தமிழகம்

விடுமுறை முடிந்து ஊர் திரும்பியவர்களால் சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல்

செய்திப்பிரிவு

பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணிபுரியும் ஊருக்கு திரும்பியதால், சேலம் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று வாகன நெரிசல் ஏற்பட்டது. இதே போல, சேலம் புதிய பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலை மோதியது. கடந்த 14-ம் தேதி முதல் நேற்று வரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொங்கல் விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொங்கலை கொண்டாட பலரும் தாங்கள் பணிபுரியும் ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் பணிபுரியும் ஊர்களுக்கு புறப்பட்டனர். கரோனா அச்சத்தில் பலர் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் பயணம் செய்ததால், நேற்று காலை முதல் சாலைகளில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

ஓமலூர் அடுத்த கருப்பூர், வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி, தலைவாசலை அடுத்த நத்தக்கரை சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகன நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் வசதிக்காக அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எண்ணிக்கையும், பயணி கள் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

SCROLL FOR NEXT