தமிழகம்

சுங்கச்சாவடிகளை மூடும் விவகாரம்: பிரச்சினைகளை தீர்க்க உயர்நிலைக் குழு - லாரி உரிமையாளர்களிடம் அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

சுங்கச்சாவடிகளை மூடுவது உள் ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண உயர்நிலைக் குழு அமைக் கப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்ததாக லாரி உரிமை யாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் முருகன் தெரிவித்தார்.

சுங்கக் கட்டணம் உட்பட லாரித் தொழிலில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணியை தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் நேற்று சென்னை யில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்மேளனம் சார்பில் தலைவர் சுகுமார், மாநில பொதுச் செயலாளர் வெ.முருகன் உட்பட 5 பேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் வெ. முருகன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள காலாவதி யான 7 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இந்த சுங்கச்சாவடிகள் மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்புகளை சுட்டிக்காட்டி அவற்றை அகற்ற கோரிக்கை விடுத்தோம். காவல் துறை மற்றும் போக்குவரத்து துறையில் ‘உடனடி அபராதம்’ விதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினோம்.

காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து, கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், குழு கூட்டம் எப்போது நடக்கும் என்பது பற்றி வரும் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு முருகன் கூறினார்.

SCROLL FOR NEXT