தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வாகனங்களில் வந்திறங்கிய சுற்றுலாப் பயணிகள் ட்ரோன் மூலம் வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். 
தமிழகம்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை ராமேசுவரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் அதிகரித்துள்ளது.

வெளியூர்களில் இருந்து வாகனங் களில் வந்த சுற்றுலாப் பயணிகளால் தனுஷ் கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ராமநாதசுவாமி கோயில் ஆகிய பகுதிகள் வாகன நெரிசலால் ஸ்தம்பித்தன. பாம்பன் சாலைப் பாலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுநர்கல் பாலத்தைக் கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்பகுதியில் தடையை மீறி குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT