தமிழகம்

சிராவயல் மஞ்சுவிரட்டின்போது 4 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் அருகே சிராவயல் மஞ் சுவிரட்டு நேற்று நடை பெற்றது. சிராவயல் பொட்டலில் அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் முட்டியதில், மஞ்சுவிரட்டைக் காண வந்திருந்த பெரியமச்சன்பட்டியைச் சேர்ந்த போஸ்(60), கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் (80) ஆகியோர் உயிரிழந்தனர். குருந்தணியைச் சேர்ந்த கண் ணதாசன்(24), தனபால் ஆகியோர் மஞ்சுவிரட்டைப் பார்க்க மோட்டார் சைக்கிளில் சிராவயலுக்குச் சென்று கொண்டிருந்தனர். திருக் கோஷ்டியூர் அருகே சென்றபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் ெசன்ற சோலுடையான்பட்டியைச் சேர்ந்த குப்பன்(65), சின்னான் ஆகியோர் மீது மோதினர். இதில் கண்ணதாசன், குப்பன் ஆகியோர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT