தமிழகம்

ஸ்ரீ வைகுண்டம் அணை தூர் வாரும் பணி: மணலை விற்க பசுமை தீர்ப்பாயம் தடை

செய்திப்பிரிவு

ஸ்ரீ வைகுண்டம் அணையை தூர் வாரும்போது அள்ளப்பட்ட மணலை விற்கக் கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக் கோரி தூத்துக்குடி மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை அமர்வின் நீதித்துறை உறுப் பினர் நீதிபதி பி.ஜோதி மணி, தொழில் நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை யில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆஜராகி, ‘ஸ்ரீவைகுண் டம் அணை பகுதியில் தூர் வாரும் பணி என்ற பெயரில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் 100 லாரிகளில் மணல் அள்ளி எடுத்துச் செல்லப்படுகிறது. குடிநீர் திட்டத்துக்காக தண்ணீர் எடுக் கும் இடங்களில் 500 மீட்டருக்கு அப்பால் தான் மணல் அள்ள வேண்டும் என்று விதிகள் இருந்தும், அதை மீறி மணல் அள்ளப்படுகிறது’ என்று புகைப்பட ஆதாரங்களுடன் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞராக ஆஜரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘அங்கு மணல் அள்ளப்பட்டு வருவது, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கும் எதிரானது. அணை பகுதியில் தூர்வாருவதை விட்டுவிட்டு உள்பகுதியில் மணல் அள்ளுவதற்கான வேலைகள்தான் நடைபெற்று வருகின்றன அதை தடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார், அமர்வு முன்பு நேரில் ஆஜரானார். மணல் அள்ளப்படுவது தொடர்பாக பதில் அளிக்குமாறு அமர் வின் உறுப்பினர்கள் ஆட்சியரிடம் கேட்ட னர். அவர், இதுவரை பல்லாயிரக் கணக்கான லோடு மணல் எடுக்கப்பட்டு, அவை அரசு அனுமதித்துள்ள கிடங்கில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் அமர்வின் உறுப்பினர்கள், “தூர் வாரம் பணிகளை, அணையில் 7 பிரி வாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 2 பிரிவுகளில் முதலில் பணிகளை மேற் கொள்ள வேண்டும். அங்கு வண்டல் மண்ணை மட்டுமே அள்ள வேண்டும். வண்டலோடு வரும் மணலை, கிடங்கில் இருப்பில் வைக்க வேண்டும். அவ்வாறு இருப்பில் உள்ள மணலை, பசுமை தீர்ப் பாயத்தின் உத்தரவின்றி யாருக்கும் விற்க கூடாது” என்று உத்தரவிட்டு மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT