ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் பிளாக் திறப்பு விழாவில், ஜிஆர்டி தலைவர் ஜி.ராஜேந்திரன், தலைமை நிதி அதிகாரி ஆர்.அனந்தநாராயணன், நிர்வாக இயக்குநர்கள் ஜி.ஆர்.அனந்தபத்மநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன், தென்காசி காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

அமர் சேவா சங்கத்துக்கு ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ரூ.1 கோடி நன்கொடை

செய்திப்பிரிவு

வாடிக்கையாளர்களின் நன் மதிப்பைப் பெற்ற ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம், தனது பெரு நிறுவன பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அமர் சேவா சங்கம் அமைப்புக்கு கடந்த 2020 அக்டோபர் மாதம் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியது.

அமர் சேவா சங்கத்தில் உள்ள மருத்துவப் பரிசோதனை மையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக இத்தொகை வழங்கப்பட்டது. இந்த நன்கொடை மூலம் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ‘ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் பிளாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளளது. அந்த கட்டிட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நன்கொடை வழங்கியது பற்றி ஜிஆர்டி-யின் மேலாண்மை இயக்குநர் ஜி.ஆர்.அனந்தபத்மநாபன் கூறும்போது, “அமர் சேவை சங்கம் மாற்றுத்திறனாளி களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. இதன் நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார். இந்த அமைப்புக்கு உதவியதை பாக்கியமாக கருதுகிறோம்” என்றார்.

மற்றொரு மேலாண்மை இயக்குநர் ஜி.ஆர்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, “மக்கள் சேவையாற்றுவதே எங்கள் குறிக்கோளாக உள்ளது. எங்கள் முயற்சிகளிலும், சேவைகளிலும் இது தொடர்ந்து வெளிப்படும்” என்றார்.

அரசு சாரா அமைப்பான அமர் சேவா சங்கம் தென்காசியில் ஆய்க்குடி எனும் சிற்றூரில் மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்களின் வளர்ச்சிக் காகவும் முன்னேற்றத்துக்காகவும் சேவையாற்ற தொடங்கப்பட்டது.

SCROLL FOR NEXT